Sunday, January 02, 2011

புத்தாண்டுப் பதிவு



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்ல பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா யோசனை .அதோட வெளிப்பாடு தான் இந்த பதிவு.
என்ன எழுதலாம்னு யோசிக்கும்போது எல்லார மாதிரியும் புத்தாண்டு உறுதி மொழி பத்தியே எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

பேசிகலி நான் கொஞ்சம் சோம்பேறி.என்னமோ கொஞ்ச நாளா ஒரு பீதி.எங்க இந்த சோம்பேறித்தனம் வளர்ச்சிய பாதிக்குமோன்னு ஒரு டவுட்டு.முதல் வேலையா இந்த படிப்ப முடிக்கணும்,எப்படா இந்த படிப்பு முடியும்னு ஒரே அங்கலாய்ப்பு.என்னோட சக ஆய்வு மாணவி சொல்லுவாங்க,"நாமளும் நடிகர் முரளி மாதிரி எப்பவுமே ஸ்டுடன்ட்டா இருக்கறா மாதிரி இருக்கு". அந்த மாதிரி இல்லாம ஸ்டூடன்ட் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்.

வெளியில பாக்கறதுக்கு ரொம்ப கூல் பர்சனாலிட்டி மாதிரி நான் தெரிஞ்சாலும் உண்மையில டென்ஷன் பார்டி அதோட ரொம்ப கோவப்படுவேன்.இந்த ரகசியம், செல்வா,அம்மா அப்பா மற்றும் ரொம்ப சில நண்பர்களுக்கே தெரியும்.அந்த அளவுக்கு நாங்க மைண்டைன் பண்ணுவோம்.மைண்டைன் பண்ற தெறம எக்கச்சக்கமா இருந்தாலும் இந்த கோவம் ப்ளஸ் டென்ஷன கொறச்சி/நிறுத்திக்கனும்னு முடிவு பண்ணி இருக்கேன்.

அப்புறம் நெறைய எழுதணும், நெறைய பாட்டு கேக்கணும்/பாடனும் (மத்தவங்க கேக்குற லெவெலுக்கு இல்லைனாலும்,நான் மட்டுமாவது கேக்குற அளவுக்கு ),நெறைய சமையல் வகைகள சாப்புடற மாதிரி செய்யக் கத்துக்கணும்,வேறென்ன ... இருக்குற கொஞ்ச நஞ்ச நல்ல பழக்கம்/கொள்கைகள தொடரனும்.இந்த வருஷத்துக்கு இவ்ளோதான்.
இதுல எத்தன அடுத்த வருஷத்து உறுதி மொழியா பார்வர்ட் ஆகப்போகுதுன்னு தெரியல
.இருந்தாலும் பாப்போம். அடுத்த பதிவில சந்திப்போம்.நன்றி:)

No comments: