Friday, August 13, 2010

இதம் தரும் தருணங்கள்...

அதிகாலையில் கேட்கும் பறவைகளின் அகவல்கள்...
நிசப்தமான இரவில் கேட்கும் பாடல்...
கடைசி பரீட்சையின் மாலைப்பொழுது ..
கடுமையான வெயிலிற்கு பிறகு பெய்யும் மழை...
கடுமையான மழைக்கு பிறகு அடிக்கும் வெயில்...
தொலைதூர பயணத்தில் பெற்றோர் கொடுத்தனுப்பிய கட்டுச்சோறு...
பழைய புத்தகத்தின் தேடுதலின் மத்தியில் கண்டறியப்படும் ரூபாய் நோட்டு ..
பல ஆண்டுகளுக்கு பிறகு முச்சந்தியில் அடையாளம் கண்டுகொண்ட பள்ளி தோழி ...
கூட்டமே இல்லாத பேருந்து...
தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி...
திடீரென அறிவிக்கப்படும் அரசு விடுமுறை...
எதிர்பாராமல் கிடைக்கும் பரிசு ...
என்றென்றும் பொழியப்பெறும் உன் அன்பு ...
யாவும் இதமே...