Friday, January 08, 2010

என் சிறு வயது வீடும், என் ஏக்கங்களும் .

என் வாழ்வின் முதல் பதினைந்து வருடங்களை சுமந்த என் வீடு..
அரசு அலுவலர் குடியிறுப்பிர்க்கே உரித்தான அனைத்து ஏற்ற இறக்கங்களையும் கொண்டிருந்தது...
ஒரு அரை மட்டுமே இருந்தது அவ்வீட்டில் ...
மூர்த்தி சிறியதெனினும் அவ்வீட்டின் கீர்த்தி மிகப் பெரியது ....
நான் ,என் தந்தை ,தாய், இரு தம்பிகள் ,பாட்டி ,பெரியம்மாவின் மகள் என ஏழு உருப்படிகள் ...
இது போக அவ்வபோது என் கிராமத்திலிருந்து வேலை தேடி வரும் விருந்தினர்களின் வருகை ...
எங்கள் கதை இப்படி இருக்க ,என் அண்டை வீட்டில் பத்து நபர்கள்!
சிற்ச்சில மன சலசலப்புகள் இருப்பினும் வாழ்கை சுவாரஸ்யமாய் இருந்தது ...
பகிர்ந்து கொள்வதில் சிரமம் இருந்த போதிலும் ஒரு வகை ஆனந்தம் இருந்தது...
இன்று என் வீடு பல அறைகளை கொண்டு ஓரளவிற்கு வசதிகள் உடைய இரண்டு மாடி கட்டிடமாக இருக்கிறது ...
தாய் தந்தை ஒரு சகோதரன் தவிர மற்றவர் யாவரும் உலகின் பல்வேறு மூலைகளில் உள்ளோம் ...
பாட்டியைத் தவிர ...
பல அறைகளை பொருட்கள் மட்டுமே நிரப்பிக் கொண்டிருக்கின்றன ...
விருந்தினர்கள் வருகையின் நேர அளவு நாட்களிலுருந்து சில மணிநேரங்களாக குறைந்துள்ளது ...
எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்றை மனம் இழந்திருக்கிறது...
ஒரு வேளை வாழ்கை முறை மாற்றத்தின் பக்க விளைவாக இருக்கக்கூடுமோ?
வழக்கம்போல் என்னால் விடையை கணிக்க இயலவில்லை...

2 comments:

இராஜ ப்ரியன் said...

விடை வேறென்ன எல்லாம் பொருளாதார வளர்ச்சி, நாகரீக முனேற்றம் .......... இன்னபிற வழக்கொழிவுகளும் நம் வாழ்க்கை முறையை அதன் வசத்திற்கு இட்டு சென்றுவிட்டது ................ இதுதான் எனக்கு தெரிந்தது, நான் சொன்னது தவறாக கூட இருக்கலாம் ...........

சுபலலிதா said...

@இராஜபிரியன் :
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே ...கருத்துக்களுக்கு நன்றி .